5/27/2022

அனுவும் முருகனும்

 புராண கதைகளில் சூரபன்மனால்  துன்புறுத்தப்பட்ட தேவர்கள் பரமேஸ்வரனிடம் முறையிடுகின்றனர் . அவரும் தேவர் துயர் தீர்க்க பரமேஸ்வரன் தான் ஒரு குமாரனைத் தருவதாக வாக்களிக்கிறார் . இந்த வாக்கைக் காப்பாற்றத்தான் ஐந்து திருமுகங்களோடு அதோமுகமும் கொள்கிறார் எம் பெருமான் , ஆறு திருமுகங்களிலும் உள்ள ஆறு நெற்றிக் கண்களினின்றும் ஆறு பொறிகள் கிளம்புகின்றன . அந்தப் பொறிகளை வாயுவும் அக்கினியும் ஏந்திவந்து சரவணப் பொய்கையில் சேர்த்து விடுகின்றனர் . அப்பொய்கையில் பூத்த ஆறு தாமரை மலர்களில் இந்தப் பொறிகள் ஆறு குழந்தைகளாக மாறுகின்றன . இந்த ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி வளர்க்கின்றனர் . இந்த கார்த்திகேயனைக் காண சிவபெருமான் உமையம்மையோடு சரவணப் பொய்கை வருகிறார். அம்மை , குழந்தைகள் அறுவரையும் சேர்த்து எடுத்து தன் மார்பகத்தில் அணைக்கிறாள். ஆறு குழந்தைகளும் சேர்ந்து ஆறுமுகத்தோடு கூடிய ஒரே பிள்ளையாக மாறுகிறார்கள்.

 அவனே கந்தன் என்றும் ஆறுமுகம் என்றும் அழைக்கப்படுகிறான் " என்று முருகன் திரு அவதாரக் கதை


 அருவமும் உருவம் ஆகி 

அனாதியாய் , பலவாய் , ஒன்றாய் 

பிரம்மமாய் நின்ற சோதிப்

 பிழம்பதோர் மேனியாகி

 கருணைகூர் முகங்கள் ஆறும்

 கரங்கள் பன்னிரண்டும் கொண்டே


ஞானம் , வைராக்கியம் , வீரியம் , ஐசுவரியம் , கீர்த்தி , அறம் , ஒன்று சேர்ந்திருக்கின்றனவோ அவனே பகவான் .


 இந்த ஆறினுள் ஏதேனும் ஒன்று சிறப்பாக ஒருவனுக்கு அமைந்துவிடுமானால் அவனே பெருமகன் ஆகிவிடுகிறான் . ஆறும் ஒன்று சேர்ந்து ஒருவனிடம் குடியிருக்குமானால் அவன் கடவுளே ஆகிவிடுகிறான் 

" இப்படி எண்ணியிருக்கிறான் தமிழன் அப்படி தமிழன் கற்பனை பண்ணிய தமிழ்க் கடவுளே முருகன் " 

இவ்வளவுதானா ? இல்லை . இன்னும் பேரொளி படைத்தவன் , அடியார்க்கு எளியவன் , வேள்விக் காவலன் , ஞானபண்டிதன் , வீரப்பெருமகன் , இன்பத் தலைவன் எல்லாம் அவனே என்று காட்டவே அவனுக்கு ஆறு திருமுகங்களைக் கற்பனை பண்ணியிருக்கிறான் ” என்றெல்லாம் அறுமாமுகவனுக்கு விளக்கம்  இந்தப் பௌதிக உலகம் பரம்பொருளின் ஸ்தூல தோற்றமே . பரம்பொருளைக் காரண வஸ்து என்றால் இந்த உலகைக் காரியவஸ்து என்று வைத்துக் கொள்ளலாம் தானே . இந்த உலகம் பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்டது .

 இந்தப் பூதப் பொருள்களைப் பகுத்துக் கொண்டே போனால் பகுக்க முடியாத ஒரு நிலையில் அதனை அணு என்கிறோம் . அந்த அணு . இயங்கும் போது புரோட்டான் , எலக்ட்ரான் என்று இரண்டு வடிவங்கள் எடுக்கின்றன . புரோட்டான் அசையாது நிலைத்து நிற்கிறது அதைச் சுற்றி சுற்றி எலக்ட்ரான்கள் சுழல்கின்றன . 

அத்தகைய பூதப்பொருள்களில் கரி  ( carbon ) என்பது ஒன்று . அதில் புரோட்டான் ஒன்றும் எலக்ட்ரான் ஆறும் இருக்கின்றன என்கின்றனர் விஞ்ஞானிகள் . இந்த எலக்ட்ரான் எண்ணிக்கையில் ஆறுக்கு அதிமாகப் போய்விட்டாலும் , குறைவாய்ப் போய்விட்டாலும் உயிர்த் தத்துவத்தை ஊட்டும் சக்தியை அது இழந்துவிடுகிறது .

 கரியில் ஆறு எலக்ட்ரான் சேர்ந்திருக்கிறது . உயிர்த் தத்துவத்தை வளர்க்கும் நடைமுறையை விளக்கவே ஆறு கார்த்திகைப் பெண்களால் இறைவனாம் முருகன் வளர்க்கப்பட்டான் என்று உருவகப்படுத்தியிருக்கின்றனர் . ஆறு பெண்கள் வளர்த்த ஆறு பிள்ளைகளையும் இணைத்தே ஓர் அறுமாமுகனை உருவாக்குகிறாள் உலகெலம் புகழ்கின்ற அன்னை உமை  . இப்படி ஆறுமுகமான பொருளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்த பொழுதுதான் அருணகிரியார் பாடிய பாடல் ஞாபகத்துக்கு வந்தது . ஆம் எல்லோருக்கும் தெரிந்த அந்த திருப்புகழ்தான் .

 ஏறுமயிலெறி விளை யாடுமுகம் ஒன்றே

 ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே

 கூறும் அடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்றே

குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகம் ஒன்றே

 மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே

 வள்ளியை மணம்புணர வந்தமுகம் ஒன்றே

 ஆறுமுகமான பொருள் நீ அருளல் வேண்டும்

 ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே .




11/09/2021

தடைகளை நீக்க கூடிய அற்புதமான பரிகார முறை

 தடைகளை நீக்க கூடிய அற்புதமான பரிகார முறை


ஒரு மனிதன் ஒரு அடி ஏறினால் இரண்டு அடி சறுக்கும் நிலையினைப்போன்று பல தடைகளை சந்தித்துக் கொண்டே இருப்பான். எவ்வளவு முயற்சிகள் செய்தாலும் அவனுக்கு தோல்வியாகவே இருக்கும். வாழ்க்கையில் எந்த ஒரு விஷயத்தையும் பண்ண முடியவில்லை. எல்லாமே முட்டுக்கட்டையாக இருக்கிறது

என புலம்புவர்களுக்கு இலகுவான பரிகார முறை ஒன்றினை இங்கு காண்போம்.


தேவையான பொருட்கள் ஓமம் வசம்பு செத்தல் மிளகாய் (வரமிளகாய்) பருத்திக்கொட்டை இலுப்பை எண்ணெய் ஒரு அகல் விளக்கு.


ஒரு ஞாயிற்றுக்கிழமையில் வசம்பை தூளாக இடித்து வைத்திருந்து நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் ஒரு அகல் விளக்கை தட்டில் வைத்து

இலுப்பெண்ணெய் விளக்கில் வசம்பு தூளை கலந்து விளக்கேற்றி வரவேண்டும். ஒரு பத்து நிமிடம் எங்களுடைய கோரிக்கையை வேண்டுதலாக அந்த விளக்கு தீபத்தில் சமர்ப்பிக்க வேண்டும் 


இதன் பின்னர் பருத்திக்கொட்டை செத்தல் மிளகாய் ( வரமிளகாய்) ஓமம் இவைகளை எடுத்து வைத்துக்கொண்டு 


முதல் வரமிளகாய் எடுத்து வலது புறம் மூன்று தடவை இடது புறம் மூன்று தடவை நம் உடலை சுற்றி அங்கம் முழுவதும் சுற்றி எடுக்க வேண்டும் 


அடுத்து பருத்திக்கொட்டையை எடுத்து வலது பக்கம் மூன்று தடவை இடது பக்கம் மூன்று தடவை நம் உடலை சுற்றி அங்கம் முழுவதும் சுற்றி எடுக்க வேண்டும் 


அதனை அடுத்து ஓமத்தை எடுத்து வலது பக்கம் மூன்று தடவை இடது பக்கம் மூன்று தடவை நம் உடல் அங்கம் முழுவதும் சுற்றி எடுக்க வேண்டும் 



சாம்பிராணி போடும் தூபக்காலை எடுத்து மாமரத்து குச்சிகளைப் பற்ற வைத்த நெருப்புத் தணலில் நம் உடலை சுற்றி எடுத்த பருத்திக்கொட்டை மிளகாய் ஓமம் இவைகளை வீட்டு வாசலில் முன் வைத்து எரித்து புகைத்து விட வேண்டும்


இந்த அற்புதமான பரிகாரத்தை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் செய்து வந்தால் தொட்டது துலங்கும் நினைத்தது நிறைவேறும்.




முகத்தில் உள்ள குழிகள் மறைய

வெளியே செல்லும் பொழுது வீதியில் உள்ளபுழுதி படிந்து முகத்தில் பரு ஏற்படுகின்றது  மற்றும் ஒவ்வாத உணவு முறைகள் பருவநிலை மாற்றத்தினால் ஒரு சிலருக்கு முகப்பரு ஏற்படும் அதன் காரணத்தால் முகத்தில் சிறு சிறு பள்ளஙகள் ஏற்பட்டு முகவதனதின் அழகினை கெடுக்கின்றது 

இதற்கு நபர்களின் ஆயுர்வேத குறிப்பு ஒன்று உள்ளது நாட்டு மருந்து கடையில் கடுக்காய் என கேட்டால் தருவார்கள் கடுக்காய் ஒரு ஐந்தினை வாங்கி அதன் தோல் தசைப் பகுதியை  உடைத்து எடுத்த (மிகுதியாக வரும் விதையினை வீசி வட வேண்டும்)

 உடைத்த கடுக்காய் தோலினை 2 கப் நீர் விட்டு ஒரு கப் நீர் வரும் அளவுக்கு கொதிக்கவத்து எடுக்க வேண்டும் அதனுடன் ஒரு கரண்டி முல்தானி மட்டியை கலந்து முகத்தில் பூச வேண்டும் இப்படி ஒரு நாள் விட்டு ஒருநாள் ஐந்து தடவைகள் செய்தால் பலன் உடனே தெரியும்.

10/31/2021

முதுமையை போக்கி இளமைத் தரும் குறிப்பு

 முகத்தில் பூசுவதற்கு முகப்பூச்சு க்ரீம் தினமும் ஒவ்வொரு கம்பெனியாக உருவெடுத்து கொண்டே இருக்கின்றது. இவைகளை பூசுவதன் மூலம் நமது சருமம் பூசும் பொழுத நன்றாக இருக்கின்றது சிறிது காலத்தின் பின்னர் சுருக்கம் விழுந்து வயதான தோற்றம் பெற்று முதுமைத் தோற்றத்தை தருகின்றது.

ஆனால் ஒரு சிலரோ வயதானவர்களாக இருந்தாலும் முகம் இளமை தோற்றமாக இருக்கின்றது. இதற்கு காரணம் அவர்கள் இயற்கை பொருட்களை வைத்து தங்கள் அழகை மேம்படுத்த கின்றார்கள். 

அவ்வாறு  இன்று நாம் உங்களுக்கு  தரும் பதிவு மிகவும் எளிமையான வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்கின்ற இலகுவான முறை ஆகும்





ஒரு கப் தக்காளி சாறுடன் சுத்தமான தரமான ரோஸ்வாட்டர் இரண்டு கரண்டியை கலந்து முகத்தில் பூசி மசாஜ் செய்து வர முகம் பொலிவாகி இளமைத் தோற்றத்தைப் பெறலாம் 


இந்த கிறக்கமான முறையை வீட்டிலேயே செய்து இளமைத் தோற்றத்தைப் பெற்று மகிழ்ச்சியாக இருங்கள்.

வாஸ்து தோஷங்களைப் போக்கும் கற்றாழை

 வாஸ்து தோஷங்களைப் போக்கும் கற்றாழை


 வீட்டில் வாஸ்து பிரச்சினை இருந்தால் குடும்பத்தில் சண்டை சச்சரவு வீண்செலவு கணவன் மனைவி இடையே பிரச்சினை சில நேரங்களில் கணவன் மனைவி பிரிந்து வாழ வேண்டிய நிலையும் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் வீட்டில் ஏதோ ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறான வாஸ்து தோஷ பிரச்சினைகளிலிருந்து விடுதலை அடைய கற்றாழைச் செடியை நமக்கு பெரிதும் உதவுகின்றது


முதலில் கற்றாழை செடியினை ஒரு தொட்டியில் வைத்து வீட்டின் உள்ளேயோ அல்லது வெளியிலோ எங்காவது ஓரிடத்தில் நாங்கள் வைக்கலாம். ஆனால் வைக்கும் இடத்தில் அந்த கற்றாழை செடிக்கு சூரிய ஒளி பட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 


ஒரு எளிமையான பரிகாரம் திங்கள் செவ்வாய் புதன் கிழமை நாட்களில் மாத்திரமே செய்யக்கூடிய ஒரு எளிய பரிகாரம். முதலில் திங்கட்கிழமை சீரகம் ஊற வைத்து வடிகட்டி எடுத்த சீதக தண்ணீரை கற்றாழை செடிக்கு ஊற்றி வரவேண்டும்

அடுத்து செவ்வாய் கிழமையில் சிறிது வெல்லம் கலந்த தண்ணீரை கற்றாழை செடிக்கு ஊற்றி வர வேண்டும்.

அடுத்து புதன்கிழமை பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள் அதற்கமைய ஒரு தேக்கரண்டி தேன் 🍯 கலந்த நீரை ஊற்றி வரவேண்டும்



 எங்களுடைய வாழ்க்கையில் பல மாற்றங்களை நாங்கள் காணலாம் உங்கள் வீட்டிலேயே பற்பல மகிழ்ச்சிகளும் சுபகாரியங்களும் தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் 


எந்த செலவும் இல்லாமல் வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து இந்த பரிகார முறையை நாங்கள் செய்யலாம் ஒரு முறை நீங்களும் செய்து உங்கள் வாழ்வில் பல மாற்றங்களை அனுபவியுங்கள்

 நன்றி


 பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இந்த பதிவினை ஷேர் செய்யுங்கள்

10/28/2021

பணம் வைக்கும் மணி பஸ்ஸில் இருந்து பணம் நிரம்பி வழிய வேண்டுமா? ஒரு எளிய பரிகாரமுறை மந்திரம் இல்லை மாயம் இல்லை அனைத்தும் உண்மையே.

பணம் வைக்கும் மணி பஸ்ஸில் இருந்து பணம் நிரம்பி வழிய வேண்டுமா? ஒரு எளிய பரிகாரமுறை மந்திரம் இல்லை மாயம் இல்லை அனைத்தும் உண்மையே. 

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்ற கருத்துக் கொண்ட இந்த உலகிலே பணம்தான் முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது. பணம் இருந்தால் தான் மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது

 பணத்தை தேடி சிலர் தீய வழியில் செல்கின்றார்கள் ஒருசிலர் நேர்மையான வழியில் பணத்தை தேடுகின்றார்கள் இன்னும் ஒரு சிலரோ முயற்சி செய்கின்றார்கள் அவர்களுக்கு எந்த வகையிலும் பணம் வந்து சேர்வதில்லை இதனைத் தீர்ப்பதற்கு எளிமையான பரிகார முறையை இங்கு நாம் கூறுகின்றோம் 

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் வெள்ளைப் பூண்டில் சிறு துண்டை எடுத்து உங்களுடைய பணம் வைக்கும் மணி பஸ்ஸில் வைத்தார் பணம் எழுதத் தொடங்கும் 

இந்த பரிகாரமானது எவ்வளவு தான் உழைத்தாலும் கையில் பணம் தங்காமல் செலவாகி கொண்டிருப்பவர்களுக்கு இந்த பரிகாரம் செய்தால் பணம் பெருகிக் கொண்டே இருக்கும்.










 


10/27/2021

தங்களுக்கு ஏற்படுகின்ற காரியத்தடை நீக்கும் அதி அற்புத சக்தி வாய்ந்த பரிகாரம் முறை

ஒரு தொழிலை செய்வதென்றால் அல்லது புதிய ஒரு விடயத்தை தொடங்குவதென்றால் நாங்கள் பல வகைகளில் முயற்சிகளை முன்னெடுத்துவருவோம். ஆனால் இறுதியில் சிற்சில காரணங்களினால் நாங்கள் முன்னெடுத்த தொழில், விடயம் மற்றும் வரவேண்டிய பணம் கைகூடாமல் தடைப்பட்டிருக்கும். இவற்றைத் தணிக்கக் கூடிய இலகுவான ஒரு பரிகார முறையை இன்று நாங்கள் காண இருக்கின்றோம்.

ஒரு சிலர் புதிய கடை வைப்பதற்கு அல்லது திருமணத்திற்கு எல்லாம் சரியாக அமைந்து திகதி நேரம் குறித்து இருப்பார்கள் அந்த நேரத்தில் தடை ஏற்பட்டும்.

இப்படிப்பட்ட காரிய தடைகளை நீக்குவதற்கு நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இலகுவான வழிபாடு மற்றும் பரிகார முறையினை இப்பொழுது நாங்கள் பார்ப்போம்.


எங்களுடைய சாமி அறையில் குண்டு மஞ்சளுடன் அருகம்புல்லை வைத்து  மஞ்சள் நூலால் சுற்றி கட்டி ஒரு சிறிய தாம்பாள தட்டில் வைத்து விட வேண்டும்.



வீட்டில் மங்களகரமான காரியங்கள் அனைத்தும் நடந்தேறும். மகத்துவம் வாய்ந்த மஞ்சளும் அருகம்புல்லும் பூஜை அறையில் சேரும்பொழுது தெய்வங்கள் அகமகிழும். 


அருகம்புல் காய்ந்ததும் அதனை அகற்றிய பின்னர் மீண்டும் புதிய அருகம்புல்லை வைத்து வழிபாடு செய்யலாம். மஞ்சள் பழுதாகி இருந்தால் மாற்றலாம். அல்லது அதையே தொடர்ச்சியாக வழிபாட்டுக்கு பயன்படுத்தலாம் .


இந்த சிறிய பரிகாரம் உங்கள் வாழ்க்கையில் பல வெளிச்சத்தை தரும் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 நன்றி



நினைத்த காரியம் வெற்றி அடைய இதைச் செய்தால் போதும் உடனே வெற்றிதான்

 சந்திரன் 🌙 சக்தியுடைய அம்சம் சூரியன் ☀️ சிவனுடைய அம்சம்.

அமாவாசையில் இருந்து மூன்றாம் நாள் (துதியை திதி) அன்று மூன்றாம் பிறையை பார்த்தால் நினைத்த காரியம் வெற்றி அடையும்  

ஆனால்  அனைவருக்கும் இந்த சந்திர தரிசனம் வெற்றி அளிப்பதில்லை ஒரு சில சூட்சுமங்கள் இருக்கின்றன.

சந்திர தரிசனம் செய்யும்பொழுது எங்களுடைய சுவாசம் வலது மூக்கால் இடம்பெற வேண்டும். அப்பொழுதுதான் நாங்கள் நினைத்த காரியம் எண்ணுகின்ற காரியம் வெற்றியாகும்.



அடுத்த நினைத்த காரியம் வெற்றியடைய உதவும் பரிகார முறையை பார்கலாம்.

  மஞ்சள் நிறமான நல்ல ஒரு எலுமிச்சம் கனியை எடுத்து கீழ்க்கண்ட மந்திரத்தை பிரம்ம முகூர்த்த வேளையில் 508 தடவை ஓதி உருவேற்றி வர நினைத்த காரியம் வியாபார வெற்றி என அனைத்தும் வெற்றியாக வரும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும் 

ஓம் ஹரி ஓம் நமோ நாராயணா 

நரசிம்ம ருபா பிரகலாத ரட்ஷகா 

ஹிரண்ய சம்ஹாரா ஹம்ஸகால பண்ணவா

 சம்ஹாயா லெட்சுமி ஸமேதா ஸ்ரீமன் நாராயணா வசீகரீ ஹ்ரீம்

இந்த சிறிய பரிகாரம் உங்கள் வாழ்க்கையில் பல வெளிச்சத்தை தரும் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 நன்றி


10/23/2021

வீட்டில் நல்ல சக்திகளை தரவல்ல கற்றாழைச் செடியை எந்த திசையில் வைக்க வேண்டும் வீட்டின் முன்புறம் வைக்க வேண்டுமா வீட்டின் பின்புறம் வைக்கும் வேண்டுமா எனும் ஆன்மீக தகவல்கள்

 வீட்டில் நல்ல சக்திகளை தரவல்ல கற்றாழைச் செடியை எந்த திசையில் வைக்க வேண்டும் வீட்டின் முன்புறம் வைக்க வேண்டுமா? வீட்டின் பின்புறம் வைக்கும் வேண்டுமா? எனும் ஆன்மீக தகவல்கள்.

கற்றாழை என்பது மருத்துவத்திற்கு மட்டும் பயன்படும் மூலிகை அல்ல அது பல மகத்துவங்களைக் கொண்ட மூலிகையாகும். அண்டத்தில் இருக்கின்ற பிரபஞ்ச சக்தியை வீட்டுக்கு அழைக்கும் இழுக்கும் அபார சக்தி கொண்டது இந்த கற்றாழைச் செடி ஆகும்.

வீட்டின் அழகுக்காகவும்  மருத்துவத்திற்காகவும் கற்றாழையை நாங்கள் எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். ஆனால் பூஜை முறைகளுக்காக வீட்டின் பின்புறம் மண் சட்டியில் கற்றாழையை வைத்தல் வேண்டும்.

கற்றாழைக்கு குமரி எனும் பெயர் உண்டு  அதனால் இந்த குமரிக்கு மஞ்சள் பூசி குங்குமம் வைத்து வணங்கி வரவேண்டும்.   இக் கற்றாழை வளர்க்கும் சட்டியில் அருகம்புல் நட்டு வளர்த்து வர வேண்டும்.



 வீட்டில் இருப்பவர்கள் இதனை வழிபாடு செய்துவர வேண்டும். பிரபஞ்ச சக்தியை அறுகம்புல் இழுக்க பக்கத்துணையாக கற்றாழை சக்திகளை ஒன்று குவித்து இழுத்து தெய்வீக சக்தியை வாரி வழங்குகின்றது.

திருமணத்தடை உள்ளவர்கள் குழந்தை பேரு தாமதமாக இருப்பவர்கள் இவ்வாறு செய்து வந்தால் அனைத்தும் கைகூடும் இலகுவான வழிபாடு தவறாமல் இதனை செய்து பல நன்மைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 




10/22/2021

ராஜயோகம் தரும் அரச இலை

மகா மகத்துவம் பொருந்திய  ராஜயோகம் தரும் அரச இலை பற்றி பார்ப்போம் அந்த காலத்திலே மன்னர்கள் தங்களுடைய அரண்மனையில் ஆலயங்களை அமைத்து மரங்களை வளர்த்தார்கள். உதாரணமாக வன்னி மரம் அரச மரம் போன்ற மரங்களை வளர்த்தார்கள். அவற்றுள் அதிக நேரம் தங்களுடைய நேரத்தை செலவழித்தது அரசமர நிழலில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

 அரசியலில் முக்கிய முடிவுகள் எடுக்கின்ற இடமாகவும் யுத்தம் தொடர்பான முடிவுகளை எடுக்கும் இடமாகவும் இந்த அரசமரம் காணப்பட்டது. 

ஒன்பது கிரகங்களும் தன்னுடைய அருள் சக்தியை வழங்குகின்ற இடமாக இந்த அரசமரம் விளங்குகின்றது. இதன் கீழ் இருந்து எடுக்கின்ற முடிவுகள் அனைத்தும் வெற்றியாகவே அமையும். இதன் அடிப்படையிலேதான் மன்னர்கள் அரச மரத்தின் கீழே முக்கியமான முடிவுகளை எடுத்தார்கள்.

அதுமட்டுமல்லாது தெளிவான நல்ல முடிவுகளை எடுப்பதற்கு இந்த அரச மரத்தில் இருந்து வருகின்ற தெய்வீக சக்தி நம்மை புத்தி கூர்மையாக்கி நேர்மையின் வழியில் வழிநடத்தும்.

 இதனால்தான் அந்தக் காலத்திலே   பஞ்சாயத்துகளில்  நாட்டாமை வழங்கும் தீர்ப்புகள் அனைத்தும் அரசமரத்தின் கீழே நடைபெற்றது 

மனிதனுக்கு குபேர வசியம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவு ராஜ வசியமும் ஒரு மனிதனுக்கு முக்கியமாகின்றது. செல்லுமிடமெல்லாம் ராஜமரியாதையுடன் மதிப்பும் மரியாதையும் கிடைக்க வேண்டும் என்பதே நம் ஒவ்வொருவருடைய எண்ணமாகும்.

அமாவாசைத் தினத்தன்று தட்டு ஒன்றில்  பதினொரு அரச இலைகளை படத்தில் காட்டியவாறு வட்ட வடிவில் அடுக்கி அதனுள்ளே பச்சை அரிசியை நிரப்பி வைத்து அதன் மத்தியிலே ஒரு எலுமிச்சம் கனியை வைத்தல் வேண்டும்'


நாட்டு மருந்து கடையில் வாங்கும் அரகஜாவை படத்தில் சிவப்பு புள்ளி இட்டு காட்டியவாறு இலைகளின் நடுவிலும் எலுமிச்சை கனியின் நடுவிலும் வைத்தல் வேண்டும்.

அதனோடு வாசனை நிரம்பிய தாழம்பூ குங்குமத்தை சேர்த்து வைக்கவும். இவை அனைத்தையும் கையின் நடுவிரலால் ( மோதிர விரல் அல்ல ) அரச இலைக்கும் எலுமிச்சம் பழத்திற்கும் பொட்டு வைத்து  நாம் வணங்கும் தெய்வத்திடம் வைத்து விளக்கு ஒன்றை ஏற்றி நாங்கள் என்ன ஆசைப்படுகின்றோமோ  என்ன பிரார்த்தனை செய்கின்றோமோ அவைகளை சொல்லி வழிபாடு செய்ய அனைத்தும் நிறைவேறும். 

தொடர்ச்சியாக இம்முறையில் அமாவாசை தோறும் வழிபாடு செய்து வந்தால் ராஜயோகம், ராஜவசியம் கிடைக்கும்.

 நம் உடலில் ராஜ சக்கரம் இயங்கும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ராஜ வசியம் ஏற்பட்டு நம் வீட்டுக்கே ராஜ வசியம் ஏற்படும்.

 மறுநாள் காலையில் இலையை ஓடும் நீரில் விடலாம் அல்லது கால் படாத இடத்தில் போடவும் பச்சை அரிசியை ஏதாவது உயிர்களுக்கு அல்லது பசுவுக்கு தானமாக கொடுத்து புண்ணியத்தை பெற்றுக்கொள்ளலாம் எலுமிச்சம் கனியை ஓடும் நீரில் விடலாம் அல்லது கால் படாத இடத்தில் வீசி விடவும்.