10/22/2021

ராஜயோகம் தரும் அரச இலை

மகா மகத்துவம் பொருந்திய  ராஜயோகம் தரும் அரச இலை பற்றி பார்ப்போம் அந்த காலத்திலே மன்னர்கள் தங்களுடைய அரண்மனையில் ஆலயங்களை அமைத்து மரங்களை வளர்த்தார்கள். உதாரணமாக வன்னி மரம் அரச மரம் போன்ற மரங்களை வளர்த்தார்கள். அவற்றுள் அதிக நேரம் தங்களுடைய நேரத்தை செலவழித்தது அரசமர நிழலில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

 அரசியலில் முக்கிய முடிவுகள் எடுக்கின்ற இடமாகவும் யுத்தம் தொடர்பான முடிவுகளை எடுக்கும் இடமாகவும் இந்த அரசமரம் காணப்பட்டது. 

ஒன்பது கிரகங்களும் தன்னுடைய அருள் சக்தியை வழங்குகின்ற இடமாக இந்த அரசமரம் விளங்குகின்றது. இதன் கீழ் இருந்து எடுக்கின்ற முடிவுகள் அனைத்தும் வெற்றியாகவே அமையும். இதன் அடிப்படையிலேதான் மன்னர்கள் அரச மரத்தின் கீழே முக்கியமான முடிவுகளை எடுத்தார்கள்.

அதுமட்டுமல்லாது தெளிவான நல்ல முடிவுகளை எடுப்பதற்கு இந்த அரச மரத்தில் இருந்து வருகின்ற தெய்வீக சக்தி நம்மை புத்தி கூர்மையாக்கி நேர்மையின் வழியில் வழிநடத்தும்.

 இதனால்தான் அந்தக் காலத்திலே   பஞ்சாயத்துகளில்  நாட்டாமை வழங்கும் தீர்ப்புகள் அனைத்தும் அரசமரத்தின் கீழே நடைபெற்றது 

மனிதனுக்கு குபேர வசியம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவு ராஜ வசியமும் ஒரு மனிதனுக்கு முக்கியமாகின்றது. செல்லுமிடமெல்லாம் ராஜமரியாதையுடன் மதிப்பும் மரியாதையும் கிடைக்க வேண்டும் என்பதே நம் ஒவ்வொருவருடைய எண்ணமாகும்.

அமாவாசைத் தினத்தன்று தட்டு ஒன்றில்  பதினொரு அரச இலைகளை படத்தில் காட்டியவாறு வட்ட வடிவில் அடுக்கி அதனுள்ளே பச்சை அரிசியை நிரப்பி வைத்து அதன் மத்தியிலே ஒரு எலுமிச்சம் கனியை வைத்தல் வேண்டும்'


நாட்டு மருந்து கடையில் வாங்கும் அரகஜாவை படத்தில் சிவப்பு புள்ளி இட்டு காட்டியவாறு இலைகளின் நடுவிலும் எலுமிச்சை கனியின் நடுவிலும் வைத்தல் வேண்டும்.

அதனோடு வாசனை நிரம்பிய தாழம்பூ குங்குமத்தை சேர்த்து வைக்கவும். இவை அனைத்தையும் கையின் நடுவிரலால் ( மோதிர விரல் அல்ல ) அரச இலைக்கும் எலுமிச்சம் பழத்திற்கும் பொட்டு வைத்து  நாம் வணங்கும் தெய்வத்திடம் வைத்து விளக்கு ஒன்றை ஏற்றி நாங்கள் என்ன ஆசைப்படுகின்றோமோ  என்ன பிரார்த்தனை செய்கின்றோமோ அவைகளை சொல்லி வழிபாடு செய்ய அனைத்தும் நிறைவேறும். 

தொடர்ச்சியாக இம்முறையில் அமாவாசை தோறும் வழிபாடு செய்து வந்தால் ராஜயோகம், ராஜவசியம் கிடைக்கும்.

 நம் உடலில் ராஜ சக்கரம் இயங்கும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ராஜ வசியம் ஏற்பட்டு நம் வீட்டுக்கே ராஜ வசியம் ஏற்படும்.

 மறுநாள் காலையில் இலையை ஓடும் நீரில் விடலாம் அல்லது கால் படாத இடத்தில் போடவும் பச்சை அரிசியை ஏதாவது உயிர்களுக்கு அல்லது பசுவுக்கு தானமாக கொடுத்து புண்ணியத்தை பெற்றுக்கொள்ளலாம் எலுமிச்சம் கனியை ஓடும் நீரில் விடலாம் அல்லது கால் படாத இடத்தில் வீசி விடவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக