10/31/2021

வாஸ்து தோஷங்களைப் போக்கும் கற்றாழை

 வாஸ்து தோஷங்களைப் போக்கும் கற்றாழை


 வீட்டில் வாஸ்து பிரச்சினை இருந்தால் குடும்பத்தில் சண்டை சச்சரவு வீண்செலவு கணவன் மனைவி இடையே பிரச்சினை சில நேரங்களில் கணவன் மனைவி பிரிந்து வாழ வேண்டிய நிலையும் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் வீட்டில் ஏதோ ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறான வாஸ்து தோஷ பிரச்சினைகளிலிருந்து விடுதலை அடைய கற்றாழைச் செடியை நமக்கு பெரிதும் உதவுகின்றது


முதலில் கற்றாழை செடியினை ஒரு தொட்டியில் வைத்து வீட்டின் உள்ளேயோ அல்லது வெளியிலோ எங்காவது ஓரிடத்தில் நாங்கள் வைக்கலாம். ஆனால் வைக்கும் இடத்தில் அந்த கற்றாழை செடிக்கு சூரிய ஒளி பட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 


ஒரு எளிமையான பரிகாரம் திங்கள் செவ்வாய் புதன் கிழமை நாட்களில் மாத்திரமே செய்யக்கூடிய ஒரு எளிய பரிகாரம். முதலில் திங்கட்கிழமை சீரகம் ஊற வைத்து வடிகட்டி எடுத்த சீதக தண்ணீரை கற்றாழை செடிக்கு ஊற்றி வரவேண்டும்

அடுத்து செவ்வாய் கிழமையில் சிறிது வெல்லம் கலந்த தண்ணீரை கற்றாழை செடிக்கு ஊற்றி வர வேண்டும்.

அடுத்து புதன்கிழமை பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள் அதற்கமைய ஒரு தேக்கரண்டி தேன் 🍯 கலந்த நீரை ஊற்றி வரவேண்டும்



 எங்களுடைய வாழ்க்கையில் பல மாற்றங்களை நாங்கள் காணலாம் உங்கள் வீட்டிலேயே பற்பல மகிழ்ச்சிகளும் சுபகாரியங்களும் தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் 


எந்த செலவும் இல்லாமல் வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து இந்த பரிகார முறையை நாங்கள் செய்யலாம் ஒரு முறை நீங்களும் செய்து உங்கள் வாழ்வில் பல மாற்றங்களை அனுபவியுங்கள்

 நன்றி


 பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இந்த பதிவினை ஷேர் செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக