10/15/2021

சாராய மது பழக்கத்திலிருந்து விடுபட மருந்து செய்முறை

 மதுபான பழக்க வழக்கம் உள்ளவர்கள் ஆரம்பத்தில் விளையாட்டாக நண்பர்களிடம் சிறிது சிறிதாக உட்கொண்டு ஒருகட்டத்தில் மதுபானம் இல்லை என்றால் தன்னால் இருக்க முடியாது எனும் நிலைக்கு மதுபானத்திற்கு அடிமையாகிறார்கள் 


இன்னும் ஒரு சிலரோ வேலை செய்த களைப்பு நீங்க வேண்டும் என்பதற்காக ஆரம்பத்தில் சாராயத்தை குறைவாக எடுத்தவர்கள் காலப்போக்கில் வேலை செய்த உழைத்த சம்பளம் அனைத்தையும் மதுபானத்திற்கு செலவழித்து குடும்பத்தை நடுத்தெருவுக்கு கொண்டு வருகின்றார்கள் 



அதற்கேற்றாற்போல் அரசாங்கமே சாராயத்தை விற்பனை செய்து கொண்டிருக்கின்றது 


சாராயம் குடிப்பவர்கள் ஒவ்வொருவரும் தான் அந்த மதுபானத்திற்கு அடிமையாக வேண்டும் என குடிப்பதில்லை 


காலப்போக்கில் மதுப் பழக்கத்தினால் அந்த மதுவுக்கே அவர்களை அடிமையாக்கி விடுகின்றது


இதிலிருந்து விடுவதற்கு நம் முன்னோர்கள் கூறிய வைத்தியம்


ஓமவள்ளி இலை எனப்படும் கற்பூரவள்ளி இலை மூன்று ஒரு டம்பளர் நிறைவாக உள்ள தண்ணீரில் இந்த மூன்று இலைகளையும் போட்டு அதனுடன் உலர்திராட்சை பத்து சேர்த்து ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்து அதன்பின்னர் காலையில் வெறும் வயிற்றிலும் மாலையிலும் அருந்தி வர 


சிறிது சிறிதாக சாராயம் குடிக்க வேண்டும் என எண்ணுகின்ற நினைப்பு நம் மூளையில் இருந்து குறைந்து கொண்டே வரும் 


நோயிலிருந்து விடுபட நினைப்பவர்கள் இந்த குடிநீரை அருந்தலாம் 


ஏற்கனவே குடித்து பழுதாகிக் கொண்டிருக்கும் உடல் அவயவங்களை சுகப்படுத்த கூடியது கற்பூரவல்லி இலை 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக