ஒரு தொழிலை செய்வதென்றால் அல்லது புதிய ஒரு விடயத்தை தொடங்குவதென்றால் நாங்கள் பல வகைகளில் முயற்சிகளை முன்னெடுத்துவருவோம். ஆனால் இறுதியில் சிற்சில காரணங்களினால் நாங்கள் முன்னெடுத்த தொழில், விடயம் மற்றும் வரவேண்டிய பணம் கைகூடாமல் தடைப்பட்டிருக்கும். இவற்றைத் தணிக்கக் கூடிய இலகுவான ஒரு பரிகார முறையை இன்று நாங்கள் காண இருக்கின்றோம்.
ஒரு சிலர் புதிய கடை வைப்பதற்கு அல்லது திருமணத்திற்கு எல்லாம் சரியாக அமைந்து திகதி நேரம் குறித்து இருப்பார்கள் அந்த நேரத்தில் தடை ஏற்பட்டும்.
இப்படிப்பட்ட காரிய தடைகளை நீக்குவதற்கு நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இலகுவான வழிபாடு மற்றும் பரிகார முறையினை இப்பொழுது நாங்கள் பார்ப்போம்.
எங்களுடைய சாமி அறையில் குண்டு மஞ்சளுடன் அருகம்புல்லை வைத்து மஞ்சள் நூலால் சுற்றி கட்டி ஒரு சிறிய தாம்பாள தட்டில் வைத்து விட வேண்டும்.
வீட்டில் மங்களகரமான காரியங்கள் அனைத்தும் நடந்தேறும். மகத்துவம் வாய்ந்த மஞ்சளும் அருகம்புல்லும் பூஜை அறையில் சேரும்பொழுது தெய்வங்கள் அகமகிழும்.
அருகம்புல் காய்ந்ததும் அதனை அகற்றிய பின்னர் மீண்டும் புதிய அருகம்புல்லை வைத்து வழிபாடு செய்யலாம். மஞ்சள் பழுதாகி இருந்தால் மாற்றலாம். அல்லது அதையே தொடர்ச்சியாக வழிபாட்டுக்கு பயன்படுத்தலாம் .
இந்த சிறிய பரிகாரம் உங்கள் வாழ்க்கையில் பல வெளிச்சத்தை தரும் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக