வீட்டில் நல்ல சக்திகளை தரவல்ல கற்றாழைச் செடியை எந்த திசையில் வைக்க வேண்டும் வீட்டின் முன்புறம் வைக்க வேண்டுமா? வீட்டின் பின்புறம் வைக்கும் வேண்டுமா? எனும் ஆன்மீக தகவல்கள்.
கற்றாழை என்பது மருத்துவத்திற்கு மட்டும் பயன்படும் மூலிகை அல்ல அது பல மகத்துவங்களைக் கொண்ட மூலிகையாகும். அண்டத்தில் இருக்கின்ற பிரபஞ்ச சக்தியை வீட்டுக்கு அழைக்கும் இழுக்கும் அபார சக்தி கொண்டது இந்த கற்றாழைச் செடி ஆகும்.
வீட்டின் அழகுக்காகவும் மருத்துவத்திற்காகவும் கற்றாழையை நாங்கள் எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். ஆனால் பூஜை முறைகளுக்காக வீட்டின் பின்புறம் மண் சட்டியில் கற்றாழையை வைத்தல் வேண்டும்.
கற்றாழைக்கு குமரி எனும் பெயர் உண்டு அதனால் இந்த குமரிக்கு மஞ்சள் பூசி குங்குமம் வைத்து வணங்கி வரவேண்டும். இக் கற்றாழை வளர்க்கும் சட்டியில் அருகம்புல் நட்டு வளர்த்து வர வேண்டும்.
வீட்டில் இருப்பவர்கள் இதனை வழிபாடு செய்துவர வேண்டும். பிரபஞ்ச சக்தியை அறுகம்புல் இழுக்க பக்கத்துணையாக கற்றாழை சக்திகளை ஒன்று குவித்து இழுத்து தெய்வீக சக்தியை வாரி வழங்குகின்றது.
திருமணத்தடை உள்ளவர்கள் குழந்தை பேரு தாமதமாக இருப்பவர்கள் இவ்வாறு செய்து வந்தால் அனைத்தும் கைகூடும் இலகுவான வழிபாடு தவறாமல் இதனை செய்து பல நன்மைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக