10/19/2021

வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்துக் கொண்டு இலகுவாக எதிரியை வெல்லும் தந்திரம் முன்னோர் எதையும் நமக்கு சாதாரணமாகச் சொல்லி விட்டுச் செல்லவில்லை வாழ்ந்து காட்டி இருக்கின்றார்கள் அதன்படியே நாமும் வாழ்வோம்

 நம் ஒவ்வொருவருக்கும் எதிரிகள் இருப்பார்கள் ஒரு சிலர் கண்ணுக்கு தெரிந்த எதிரியாக இருப்பார்கள். ஒரு சிலர் கண்ணுக்கு தெரியாத எதிரியாகவும் அதாவது பகைவர் களாகவும் இருப்பார்கள்.


அவர்கள் பலபல தடைகள் தொந்தரவுகளை தந்து கொண்டு இருப்பார்கள். அவர்களின் தொந்தரவிலிருந்து விடுபட இலகுவான ஒரு பரிகாரம்

பால் பெருங்காயம் வெண்கடுகு
அந்தக் காலத்திலே ராஜாக்கள் அரண்மனையில் ஏற்படுகின்ற பிரச்சனைகள் மற்றும் நாட்டின் பகைவர்களால் ஏற்படுகின்ற தொல்லைகளில் இருந்து இலகுவாக தப்பித்துக்கொள்ள இந்த பரிகார முறையை பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயம்

நம் முன்னோர்கள் நமக்கு சொல்லி வைத்த இலகுவான பரிகார முறை இதுவாகும். இதற்கு முதலில் தேவைப்படுவது பால் பெருங்காயமாகும்.  இல்லாதவர்கள் சாதாரண பெருங்காயம் வேண்டுமென்றாலும் எடுக்கலாம். ஆனால் ஓலைச்சுவடியில் கூறியிருப்பது பால் பெருங்காயத்தை பற்றியே.

பால் பெருங்காயம் ஒரு துண்டு அல்லது இரண்டு துண்டும்  ஒரு கையளவு வெண்கடுகும் எடுத்துக்கொண்டு
யார் நமக்கு தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கின்றார்களோ
அவருடைய பெயரை ஒரு வெள்ளைக் காகிதத்தில் எழுதவும்.
 முடிந்தால் ராசி நட்சத்திரமும் எழுதலாம் இல்லாவிட்டாலும் பிரச்சினையில்லை. அந்த வெள்ளைக் காகிதத்தில் உள்ளே நாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்த பால் பெருங்காயம் மற்றும் வெண்கடுகை வைத்து சுற்றி மறைத்து வைத்துக் கொள்ள வேண்டும் 
குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் மறைந்து வைத்தல் வேண்டும் மாதம் ஒரு முறை புதிதாக செய்து வைத்துக்கொள்ள வேண்டும்

ஒவ்வொரு மாதம் செய்து வருகின்ற இந்த பரிகார முறையை பொருட்களை ஒரு டப்பாவில் போட்டு மூடியால் மூடாமல் வைத்திருக்க வேண்டும் 


வெண்கடுகு மற்றும் பால் பெருங்காயத்தின் சக்தியால் உங்களுடைய எதிரி உங்களுக்கு கொடுத்த துன்பம் போதும் இனி தொல்லை கொடுக்கக்கூடாது
எனும் மன மாற்றத்துக்கு உள்ளாவார். இதனால் எதிரியும் நண்பனாக மாற வாய்ப்பு இருக்கின்றது.



வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்துக் கொண்டு இலகுவாக எதிரியை வெல்லும் தந்திரமாக இதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
முன்னோர் எதையும் நமக்கு சாதாரணமாகச் சொல்லி விட்டுச் செல்லவில்லை வாழ்ந்து காட்டி இருக்கின்றார்கள் அதன்படியே நாமும் வாழ்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக