தோஷங்கள் பலவகையுண்டு. வீட்டிற்கும் ஒரு சில தோஷங்கள் ஏற்படும். சில நேரங்களில் மனிதர்களுக்கும் தோஷம் ஏற்பட்டு இருக்கும்.
வீட்டில் தோஷம் இருந்தால் வீட்டில் நிம்மதி இருக்காது. உறவுகளுக்கு இடையே ஒற்றுமை இன்றி சண்டை சச்சரவு இருக்கும். வீட்டில் மகிழ்ச்சி என்பதே இல்லாமல் உறக்கமாக இருக்கும். சில நேரங்களில் வீட்டில் இன்னொரு நபர் இருப்பதைப் போன்ற அச்ச நிலையும் ஏற்படும்.
மனிதர்களுக்கு தோஷம் ஏற்பட்டால் குழந்தைகளாக இருந்தால் மெலிந்து தொடர்ச்சியாக அழுது கொண்டே நோய்வாய்ப்பட்டு இருப்பார்கள்.
வயதில் பெரியவர்களுக்கு நோய் ஏற்படும். செல்லுமிடமெல்லாம் அதிருப்தியாகவே இருக்கும். வீண் சண்டை வாக்குவாதங்கள் ஏற்படும். சம்பந்தமில்லாமல் நெருங்கிய உறவுகளுடன் சண்டை போடுவார்கள். நன்மை தீமை தெரியாமல் சண்டையும் சச்சரவுமாக இருப்பார்கள்.
இவை அனைத்துக்கும் ஒரு மருந்தாக நாம் இன்று காண இருப்பது முக்கியமான ஒரு பதிவாகும்.
செம்பு பாத்திரத்தில் சுத்தமான பன்னீரை அரைவாசி அளவுக்கு எடுத்து ( சுத்தமான பன்னீர் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ) அத்துடன் மஞ்சள் தூள் மூன்று சிட்டிகை அதனுள் விட்டு பச்சை கற்பூரம் சிறிதளவு விட்டு மொட்டை மாடி இருப்பவர்கள் மொட்டை மாடியிலும் மொட்டை மாடி இல்லாதவர்கள் வீட்டினுள்ளும் ஒரு இரவு முழுவதுமாக வைக்க வேண்டும்.
வைக்கும் பொழுது என்னுடைய வீட்டிலும் வீட்டில் இருக்கின்ற நபர்களுக்குகும் எந்த தோஷம் இருந்தாலும் அவை எங்களை விட்டு விலக வேண்டுமென இஷ்ட தெய்வத்தையோ அல்லது குலதெய்வத்தையோ வழிபாடு செய்ய வேண்டும். உங்களுக்கு பிடித்த யாரை வேண்டுமானாலும் வழிபாடு செய்யலாம்.
இவ்வாறு செய்யப்பட்ட தோஷங்கள் நீக்கும் தீர்த்தத்தை வீட்டின் உள்ளேயும் வெளியேயும் சுற்றி தெளிக்க வேண்டும் கடமை செய்யும் அலுவலகம் (ஆபிஸ்) மற்றும் நாம் பயணம் செய்யும் வாகனத்திலும் தெளிக்கலாம்.
சில நேரங்களில் நமது வாகனங்களில் செல்லும் பொழுது தொடர் விபத்துகள் ஏற்படும் இவற்றில் இருந்து விடுபடுவதற்கு இந்த தீர்த்தம் பேருதவியாக இருக்கும்
வீட்டில் உள்ள மனிதர்களுக்கு தலையில் தெளிக்கலாம், முகம் கை ✋ கால் கழுவலாம்.
இதனால் வீட்டிற்கும் வீட்டில் உள்ள நபர்களுக்கும் முகத்தில் பிரகாசமும் தெளிவும் ஏற்படும்
பிறந்த குழந்தைகள் இருந்தால் அவர்களை சுற்றி இந்த புனித தீர்த்ததை தெளித்தால் எந்த கண்ணுறு நாவூறு எது இருந்தாலும் விலகிவிடும்.
மஞ்சள் சகல மங்களகரமான நிகழ்வுகளையும் ஆரம்பித்து வைக்கும்.
பச்சைக் கற்பூரம் சகல தெய்வ சக்திகளையும் அழைத்து எடுக்கும்.
பன்னீர் அனைத்தையும் சுத்தம் செய்து விடும்.
நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிவைத்த இந்த பரிகார முறை ஒவ்வொரு கிழமையும் செய்து வாழ்வில் சுபிட்சம் பெறுவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக