10/22/2021

வாழ்வில் வெற்றியை தரும் வெட்டிவேர்

 வாழ்வில் பல சங்கடங்களை நாங்கள் அனுபவித்துக் கொண்டு இருப்போம் அவற்றிலிருந்து இலகுவாக விடுவதற்கு வெட்டிவேர் பேருதவியாக இருக்கின்றது.

இந்த வெட்டிவேர் உடன் சில சில விடயங்களை சேர்த்தோமானால் எப்பேற்பட்ட நெகட்டிவ்  தீயசக்திகளை துரத்தி விடும் வாழ்வில் பல நற் பலன்களை பெறலாம்.

வெற்றியைத் தரும் வேர் வெட்டிவேர் வசிய சக்தியை பெற்று தருகின்றது வீட்டுக்கு அதிர்ஷ்டத்தை அழைக்கிறது.



வெற்றிலையில் ஒரு மஞ்சள் துண்டு மற்றும் வெட்டிவேர் இவைகளை ஒன்று சேர்த்து வைத்து மஞ்சள் நூலால் சுற்றி கட்டி விட வேண்டும்.இவ்வாறு செய்து பணம் வைக்கும் பெட்டியில் வைத்தால் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும். நகை வைக்கும் பெட்டியில் வைத்தால் நகை சேர்ந்து கொண்டே இருக்கும். தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் பெட் ரூமில் வைத்து உறங்கினால் இலகுவாக ஆழ்ந்த உறக்கம் வரும் 

தெய்வங்களை நம் வீட்டுக்கு அழைத்து எடுக்கும் எங்கள் வீட்டிலேயே அவைகள் நிரந்தரமாக தங்கி இருப்பதற்கு இந்த வெட்டிவேர் மிகவும் பயன்படுத்தப்படுகின்றது

தெய்வங்களும் மகிழ்ந்திருக்கும் வீட்டின் வாஸ்து தேவதைகளும் மகிழ்ந்திருக்கும் எங்களுடைய ஆன்மாவும் மகிழ்ந்திருக்கும் வீட்டில் பல சுபகாரியங்களும் நடக்கத் துவங்கி விடும் 

நாங்கள் நினைத்த விஷயம்  நடக்க வேண்டும் என்றால் என்ன  நடக்க வேண்டும் என்பதை ஒரு காகிதத்தில் எழுதி அந்த காகிதத்தை வெற்றிலை, மஞ்சள் துண்டு, வெட்டிவேர் இவை மூன்றையும் காகிதத்தில் சுற்றி கட்டி வைக்க வேண்டும் ஒவ்வொரு கிழமையும்  வெற்றிலையை மாத்திரம் மாற்றி வர வேண்டும் நாங்கள் நினைத்த விடையும் நிறைவேறினால் கால் படாத இடத்தில் அல்லது நீர் நிலையில் இந்த பொருட்களை சேர்த்து விட வேண்டும்.

 இந்த மங்களகரமான மூன்று பொருட்களாலும் சகல மங்கலங்களும் உண்டாகி நல்வாழ்வு வாழலாம் 

வாழ்க வளமுடன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக