தடைகளை நீக்க கூடிய அற்புதமான பரிகார முறை
ஒரு மனிதன் ஒரு அடி ஏறினால் இரண்டு அடி சறுக்கும் நிலையினைப்போன்று பல தடைகளை சந்தித்துக் கொண்டே இருப்பான். எவ்வளவு முயற்சிகள் செய்தாலும் அவனுக்கு தோல்வியாகவே இருக்கும். வாழ்க்கையில் எந்த ஒரு விஷயத்தையும் பண்ண முடியவில்லை. எல்லாமே முட்டுக்கட்டையாக இருக்கிறது
என புலம்புவர்களுக்கு இலகுவான பரிகார முறை ஒன்றினை இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள் ஓமம் வசம்பு செத்தல் மிளகாய் (வரமிளகாய்) பருத்திக்கொட்டை இலுப்பை எண்ணெய் ஒரு அகல் விளக்கு.
ஒரு ஞாயிற்றுக்கிழமையில் வசம்பை தூளாக இடித்து வைத்திருந்து நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் ஒரு அகல் விளக்கை தட்டில் வைத்து
இலுப்பெண்ணெய் விளக்கில் வசம்பு தூளை கலந்து விளக்கேற்றி வரவேண்டும். ஒரு பத்து நிமிடம் எங்களுடைய கோரிக்கையை வேண்டுதலாக அந்த விளக்கு தீபத்தில் சமர்ப்பிக்க வேண்டும்
இதன் பின்னர் பருத்திக்கொட்டை செத்தல் மிளகாய் ( வரமிளகாய்) ஓமம் இவைகளை எடுத்து வைத்துக்கொண்டு
முதல் வரமிளகாய் எடுத்து வலது புறம் மூன்று தடவை இடது புறம் மூன்று தடவை நம் உடலை சுற்றி அங்கம் முழுவதும் சுற்றி எடுக்க வேண்டும்
அடுத்து பருத்திக்கொட்டையை எடுத்து வலது பக்கம் மூன்று தடவை இடது பக்கம் மூன்று தடவை நம் உடலை சுற்றி அங்கம் முழுவதும் சுற்றி எடுக்க வேண்டும்
அதனை அடுத்து ஓமத்தை எடுத்து வலது பக்கம் மூன்று தடவை இடது பக்கம் மூன்று தடவை நம் உடல் அங்கம் முழுவதும் சுற்றி எடுக்க வேண்டும்
சாம்பிராணி போடும் தூபக்காலை எடுத்து மாமரத்து குச்சிகளைப் பற்ற வைத்த நெருப்புத் தணலில் நம் உடலை சுற்றி எடுத்த பருத்திக்கொட்டை மிளகாய் ஓமம் இவைகளை வீட்டு வாசலில் முன் வைத்து எரித்து புகைத்து விட வேண்டும்
இந்த அற்புதமான பரிகாரத்தை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் செய்து வந்தால் தொட்டது துலங்கும் நினைத்தது நிறைவேறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக