பணத்தை ஈர்க்கும் வேப்பமரம்
லட்சுமி கடாட்சம் நிறைந்த மரங்களில் வேப்பமரமும் ஒன்றாகும். இதனால் தான் நம் முன்னோர்கள் வீட்டு வாசலில் வேப்ப மரம் வளர்த்தார்கள். இதனால் விஞ்ஞான ரீதியாகவும் எங்களுக்கு பல நன்மைகள் உண்டு. ஆன்மீக ரீதியாகவும் எங்களுக்கு பற்பல நன்மகள் உண்டு.
எங்களை நெருங்கி வருகின்ற தீய சக்திகளை விரட்டும் வல்லமை இந்த வேப்ப மரத்துக்கு உண்டு. அத்தோடு பணத்தை வாரி வழங்கும் அதிக சக்தியும் இந்த வேப்ப மரத்திற்கு உண்டு.
நம்மிடம் இருக்கின்ற வெள்ளி கால்கொலுசு அல்லது வெள்ளி நாணயம் என எது இருந்தாலும் அவற்றை நன்றாக பன்னீரில் சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும்.
அந்த வெள்ளி நாணயத்தை ஒரு கயிற்றில் கட்டி வேப்ப மரத்தின் வேரிலோ அல்லது வேப்ப மரத்திலோ சுற்றி கட்டிவிட வேண்டும்.
ஒரு மணி நேரம் கழிந்த பின்னர் மீண்டும் அவிழ்த்து எடுக்க வேண்டும்.
இச்செயன்முறையை வெள்ளிக்கிழமையில் செய்ய வேண்டும். அத்துடன் சுக்கிர ஓரை வருகின்ற நேரத்தில் செய்தால் மேலும் சிறப்பாக இருக்கும்.
இங்ஙனம் பெறப்பட்ட வெள்ளி நாணயத்திற்கு தூபதீபம் காட்டி பணம் வைக்கும் பெட்டியில் வைத்தால் பணம் வந்து கொண்டே இருக்கும். வருகின்ற பணம் வெளியே செல்லாது சேமிப்பாக இருக்கும் எப்போதும் விரயமாகாது.
ஒரு சிலர் எவ்வளவு தான் உழைத்தாலும் பணம் செலவாகிக் கொண்டே இருக்கும் கையில் பணம் தங்குவதில்லை. இதைத் தவிர்ப்பதற்கு இந்த பரிகார முறை மிகவும் சிறந்ததாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக