10/15/2021

மூன்று ஜென்ம பாவங்கள் தீர்க்கும் பரிகாரம்

 இந்த உலகிலே உயிர்களின் பாவ-புண்ணிய கணகிற்கு ஏற்றவாறு அவற்றினுடைய வாழ்க்கை தீர்மானிக்கப்படுகின்றது. அந்த வகையில் ஜென்ம ஜென்மமாக ஒரு ஆன்மாவானது தனது கர்ம வினையை தீர்ப்பதற்கு பிறப்பு எடுக்கின்றது.

அதிலும் குறிப்பாக மூன்று ஜென்ம கர்ம வினைகளே ஒரு மனிதனை மிகவும் துன்பப் படுத்துகின்றது. அவைகளை தீர்ப்பதற்கு முன்னோர்கள் சொன்ன பரிகாரம் வருமாறு.

தாமரை என்பது தெய்வீகமான மலர் அந்த தாமரைத்தண்டு செடியிலிருந்து எடுக்கப்படும் நூலினை திரியாக திரித்து வெள்ளிக்கிழமை சுத்தபத்தமாக காலையும் மாலையும் நெய் விட்டு  அகல் விளக்கு ஏற்றி வரவேண்டும்.

இப்படியாக ஐந்து வெள்ளிக்கிழமை தோறும் வழிபாடு செய்து வர வேண்டும். இந்த வழிபாடு செய்யும் பொழுது உணவு இல்லாதவர்களுக்கு உணவளிப்பது ஏதாவது பசியாக இருக்கும் உயிரினங்களுக்கு உணவளிப்பது குறிப்பாக பசுவுக்கு உணவு அளிப்பது மிகவும் நற்பலனைத் தரும்



 .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக