3/15/2021

கந்தபுராணத்தில் தாரகன் வதை

 அசுரர்கள் கொடுமைக்காற்றாது சிவபெருமானிடம் சென்று ' எத்தனை யுகமாக நாங்கள் அவதியுறுகின்றோம் ; அருள் செய்யவேண்டும் ' என்று இந்திரன் விண்ணப்பித்துக்கொண்டான் .

 சிவபெருமான் தம்மிடையில் இருந்த முருகனை நோக்கி ' அசுரர்களை வென்று , சூரனையடக்கி , தேவர்கள் துன்பத்தை நீக்கி , உலகில் வைதிக சைவ நெறியைப் பாதுகாத்து வருக ' என ஆணைதந்து பதினொரு உருத்திரர்களையும் தோமரம் , கொடி , வில் , வாள் . குலிசம் , அம்பு . அங்குசம் , மணி , தாமரை , தண்டம் , வில் , மழு என்ற படைக்கலங்களாக்கி முருகனுடைய திருக்கரங்களிலே தந்து , வேலாயுதம் ஒன்றையும் படைத்து , அதன் பெருமைகளையும் உணர்த்தித்தந்தனர் .

 மேலும் , இலக்கத்தொன்பது வீரர்களையும் , முருகனுக்குத் துணையாகச் செல்லுக எனப் பணித்தருளினார் . பூதகண நாதர்களையும் பூதங்களையும் உடனனுப்பியருளினார் . பேராற்றல் வாய்ந்த இலக்கம் குதிரைகள் பூட்டப் பெற்ற தேரொன்றையும் படைத்துக்கொடுத்து , ' இதில் ஆரோகணித்துச் சென்று வருக ' என ஆணை வழங்கினர் . 

முருகன் தேரேறிக் கணங்கள் புடைசூழப் பூமியைநோக்கிப் புறப்பட்டார் . தேவர்கள் சூரன் ஒழிந்தான் என்று துள்ளினர் : ஆர்ப்பரித்தனர் . முருகக்கடவுள் வரும் வழியில் , மாயைவல்லதும் , சூரபன்மன் கடைசித்தம்பி தாரகனுக்கு உறைவிடமானதும் ஆகிய கிரௌஞ்சமலை எதிர்ப்பட்டது . இந்திரன் கலங்கினான் . நாரதமுனிவர் அந்த மலையின் ஆற்றலையும் , தாரகன் கொடுமையையும் , அவனைக் கொன்றால் அவன் அண்ணனாகிய சூரனைக் கொல்வதின் எளிமையையும் எடுத்து விண்ணப் பித்தனர் .

 முருகக்கடவுள் வீரவாகுதேவரை நோக்கி ' நீ இலக்கத்தெட்டு வீரர்களோடு தாரகன் தலைாகரமாகிய மாயாபுரிக்குச் சென்று அவனை வென்று வருக ' என்றனுப்பினர் . தாரகன் ஏழு வீரர்களோடும் போர்புரிந்து மாயத்தால் அவர்களைத் தோற்கடித்தான் . வீரவாகுதேவர் எதிர்த்தார் . அவரோடு நேராகப் போர் செய்ய ஆற்றாது தன் தேரைவிட்டு இறங்கி ஓடி னான் . வீரவாகுதேவர் அவன் மீது படைக்கலம் செலுத்துதல் போர்ப்பண் பன்று என்றெண்ணத் துரத்தினர் . தாரகன் கிரவுஞ்சமலையின் குகைக்குள் ஓடி ஒளிந்தான் . 

வீரவாகுதேவரும் பின்தொடர்ந்து சென்றார் . மலை மாயத் தால் அவரைச் சிறைப்படுத்தியது . இந்நிகழ்ச்சியை நாரதர் வாயிலாக அறிந்த முருகன் தாமே சென்று தாரகனோடு பொருதார் . தாரகன் அளவிலா வஞ்சகப்போரைச் செய்ய அவை அறுமுகக்கடவுளின் ஞானப்போரின் முன் பயனற்றன . முருகன் ஞானசக்தியாகிய வேலை ஏவி , கிரவுஞ்சத்தைத் துளைத்து வீரர்களை விடுவித் தார் . தாரகனைக் கொன்றார் .

 தேவர்கள் இந்த முதல் வெற்றியைப் போற்றிப் புகழ்ந்து பூசித்தனர் . முருகன் போர்க்களத்தில் இறந்துபட்ட பூதகணங்களை எழுப்பிப் போர்க்களத்தைவிட்டு நீங்கினார் . தேவகிரியை அடைந்தார் . தேவர்கள் அங்கே ஒரு தேவாலயம் நிருமித்து , அதில் முருகனை எழுந்தருளச் செய்து பூசித்தனர் . முருகப்பிரான் அனைவர்க்கும் அருள் வழங்கினார் .

 மாயாபுரியில் தாரகன் இறந்ததும் , அவன் மகன் அசுரேந்திரன் அழுது புலம்பிக்கொண்டே , தன் தந்தை இறந்தசெய்தியைச் சூரனிடம் தெரிவிக்க வீரமகேந்திரபுரம் சென்றான் , சூரபன்மனிடம் தெரிவித்துக் கொண்டான் . சூரபன்மன் சினந்து ' யானே சென்று என் தம்பியைக் கொன்ற ஆறுநாட்பாலகனை அழித்துவருவேன் ' என்று படைகள் புடை சூழப் போருக்குப் புறப்பட்டான் . அப்பொழுது அமோகன் என்னும் அமைச்சன் ஒருவன் ' மாற்றார் வலியறியாது தாங்களே போருக்குச் செல்ல லாகாது : சிறந்த வீரனைப் படையோடு அனுப்பி அறிந்துவரச் செய்க ' என விண்ணப்பித்தனன் . அவ்வாறே சூரன் கோபந்தணிந்து , பகன் . மயூரன் . சேனன் , சக்ரவாகன் முதலிய ஒற்றர்களை அனுப்பிவிட்டு இனிமையாக அரசு செலுத்தி விற்றிருந்தான் .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக