5/30/2021

முருகன் ஆயுதங்கள்


 சிற்பங்களில் செறிந்துள்ள ஆயுதங்களைப்பற்றிய வரலாற்று நுணுக் கங்கள் ' கணபதி ' என்ற நூலில் விரித்துரைக்கப்பெற்றன. முருகனுடைய திருக்கரங்களில் தண்டம் , சக்தி , வச்சிரம் , அட்சமாலை , கட்கம் , கேடகம் , பாணம் , சக்கரம் . கதை , பாசம் , வில் , அங்குசம் , சூலம் , கலப்பை . வேல் , மணி . குக்குடம் , கமண்டலம் , தோமரம் . சங்கம் . வல்லி , மலரம்பு . கரும்பு வில் , தீயகல் , சுருவம் . சுவஸ்திகம் , பரசு , தீக்கடைகோல் , கோழிக் கொடி முதலிய நாற்பத்தைந்திற்கு மேற்பட்ட ஆயுதங்கள் விளங்கு கின்றன . 

மணி , அட்சமாலை , கமண்டலம் போன்றவைகள் ஆயுதம் அல்ல வானாலும் , ஆயுதமாக உபசரிக்கப்படுகின்றன . ஆதலால் அவைகளையும் , கணபதி என்ற நூலில் விரிக்கப்பெற்றவைகளையும் விலக்கி ஏனையவற்றைப் பற்றிய குறிப்புக்களே ஈண்டுக் கொடுக்கப்படுகின்றன.




 வச்சிரம் : - இது ஆயிரம் நுனிகளை உடையது . குலிசம் என்றும் அழைக்கப்பெறுவதுண்டு . திண்ணியபொருள் எதுவானாலும் உடைக்கும் வல்லமை உடையது .

 கலப்பை : - இது உழுபடை . பகைவர்கள் மேனியை வயலாகக் கொண்டு உழுவதற்குதவுவது , பலராமன் இதனையே ஆயுதமாகக்கொண்டு பகைவர்களை வென்றான் என்று பாரதம் கூறுகிறது . 

வேல் : - இது முருகனுக்கே உரிய சிறந்த ஆயுதம் , இதற்கு ஆறு நுனிகள் உண்டு . இக்காலத்துச் சிலர் , காம்பு நீளமான அம்பையே வேல் எனக் கருதுகின்றனர் . ' வேலன்று வென்றிதருவது " என்று மன்னனுக்கு அறிவுரை வழங்கவந்த வள்ளுவர் குறிப்பிடுகிறார் . இதனால் வென்றிதரும் சிறந்த கருவி வேல் என்பது அறியப்படும் . வேலும் வென்றியும் வெல் என்னும் வேர்ச்சொல்லிலிருந்து விளைந்தனவே அதனாலேயே வேல் தலையாய கருவியாயிற்று . இதனை ' எஃகு ' ' சுடரிலைவேல் ' என அழைக் கிறது திருமுருகாற்றுப்படை . 

நக்கீரதேவர் , ' ' ஐயிரு வட்டமொடு எஃகு வலந்திரிப்ப , ஒருகை " என்று திருமுருகாற்றுப்படையில் கூறுகிறார் . முருகன் தனது ஒரு திரு கையினால் வேலை வலமாகச்சுழற்றி வீரந்தோன்ற விளங்குகிறார் என்ப இதன் கருத்து . 

மணி :- இது ஒரு படைக்கலமல்லவாயினும் பரநாதத்தை எழுட் வதால் ஆணவ இருள் அகன்று ஆன்மாக்கள் உய்திபெறுகின்றன . ஆதலா இது ஒரு ஞானப்படையாயிற்று . ' ' பாடின் படுமணி இரட்ட ஒருகை என்கிறார் நக்கீரதேவர் .

 குக்குடம் : - கோழி . இது அக்கினிதேவன் அம்சம் . சூரபன்மனா பொருவதற்குமுன் முருகனுடைய கொடியிலிருந்து கூவிற்று ; அதனா ஆயிரம் அசுரவெள்ளங்கள் இறந்தன என்று கந்தபுராணம் தெரிவிக்கிறது அதனால் இது சிறந்த படைக்கலமே . 

தோமரம் : - இது உலக்கை . பகைவர்களைச் சாடப்பயன்படுவது .

 சுருவம் : - இது  யாகத்தீயில் நெய்யிடுவதற்குப் பயன்படுவது அந்தணர் வேள்வி ஓர்க்கும் முகத்திற்கு ஏற்பத் துணைபுரிவது . 

சுவஸ்திகம் : இது பகைவர்மேல் சுழற்றி எறியப்படும் ஒ ஆயுதம் . மங்கலப் பொருள்களுள் ஒன்றாகவும் வைத்தெண்ணப்படுவது 

தீக்கடைகோல் :- இது . அரணிக்கட்டை என வழங்கும் . வேட கையில் விளங்குவது . வேடர்குலத் தலைவராகிய செவ்வேள் திருக்கரத்து அமைந்திருப்பது வியப்பன்று .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக