3/14/2021

இன்று நாம் காண இருப்பது பிரணவ உபதேசம் கந்த புராண வரலாற்று பகுதி07

 : நாரதமுனிவர் ஒரு யாகம் செய்தனர் . அந்த யாகத்தில் நிகழ்ந்த மந்திரலோபம் காரணமாக அவர் நினைப்பிற்குமாறாக ஓர் ஆடு தோன்றி உலகையே கலக்கிற்று . தேவர் முதலிய அனைவரும் அஞ்சினர் . தேவர்கள் வேண்டுகோளின்படி முருகன் ஆட்டுக்கடாவை அடக்கித் தமது வாகன மாகக் கொண்டார் .
 பின்னர் முருகன் அருளால் நாரதர் வேள்வியை இனிது முடித்தார் . அது முதல் ஆட்டுக்கடாவை வாகனமாகக்கொண்டு முருகன் மூவுலகங்களிலும் உலாவருவார் . இங்ஙனம் நிகழுங்காலையில் ஒருபோது . திருக்கயிலை சென்று சிவபெருமானை வணங்கி வரும் தேவர்கள் முருகனையும் வழிபட்டு அருள் பெற்றுச் செல்வார்கள் . பிரமன்மட்டும் வீழ்ந்து வணங்காமல் கைகூப்பி நின்றான் .
 பிரமதேவன் மனத்திலுள்ள ஆணவத்தடிப்பையறிந்த முருகன் ' சிருட்டித்தொழில் செய்யும் உனக்கு வேதம் வருமா ? வருமாயின் ஓரிருக்கு ஓதுக ' என்றனர் . பிரமன் ஓம் என்று தொடங்கினான் . ' போதும் இதன் பொருள் யாது ? ' என்று கேட்க அவன் விழித்தான் . ' இதுகூடத் தெரியாத நீ சிருட்டிப்பது எப்படி ? 
என்று நாலுதலையும் குலுங்கக்குட்டிக் கந்தவெற்பின் ஒருசாருள்ள சிறை யில் அடைத்துச் சிருட்டித்தொழிலைத் தாமே செய்தனர் . இதனையறிந்த திருமால் பிரமனை விடுவிக்க எண்ணிச் சிவபெருமானிடம் விண்ணப்பித்துக் கொண்டார் . 
சிவபெருமான் நந்திதேவரை முருகனிடம் அனுப்பி அயனைச் சிறை விடுக எனப் பணித்ததாகத் தெரிவித்துவருக என்றனர் . நந்திதேவர் முருகப் பெருமான் உடம்படாமையைக்கண்டு ஓடிப்போய்ச் சிவபெருமானிடம் தெரிவித்துக்கொண்டார் . 

சிவபெருமான் புன்முறுவல் பூத்து இடபத்தில் ஏறிக் கந்தவெற்பை அடைந்து . அயனைச் சிறைவீடுசெய்வித்து ' மைந்த பிரணவப் பொருள் உனக்குத் தெரியுமோ ? தெரிந்தாற் சொல்க ' என்றனர் முருகன் அவர் திருச்செவியில் பிரணவப்பொருளைச் சொன்னார் . கேட்டு உளமகிழ்ந்த ஞானநாயகராகிய சிவபெருமான் திருக்கயிலையையடைந்தார் முருகன் வீரர்களும் , பூதகணங்களும் புடைசூழக் கந்தவெற்பில் எழு தருளி உலகம் உய்யும் வண்ணம் அகத்தியர்க்குப் பிரணவப் பொருளை உட தேசித்து வீற்றிருந்தார் .

 அப்போது திருமாலின் புத்திரிகளாகிய அமிர்த வல்லியும் சுந்தரவல்லியும் ' எம்மை மணந்துகொள்ள வேண்டும் ' என்ற விண்ணப்பித்தனர் . முருகன் ' தேவகாரியம் சிறிதுளது : அதனை முடித்த மணப்போம் : அதுவரையில் அமிர்தவல்லியாகிய நீ இந்திரனுக்கு மகளாக இரு : சுந்தர வல்லியாகிய நீ சிவமுனிமகளாக வேடர்களிடத்தே வளர்ந்த கொண்டிரு ' என் றருளிச்செய்தார் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக