3/12/2021

முருகன் ஒருருவான வரலாறு கந்தபுராண வரலாறு பகுதி 05



 இங்ஙனம் நிகழுநாட் களில் ஒருநாள் சிவபெருமான் உமையம்மை யாருடன் முருகனைக் காணச் சரவணப்பொய்கைக்கு எழுந்தருளினார் . முருகன் தமது தந்தையாரை நோக்கி மனமகிழ்ந்தார் ; முகமலர்ந்தார் . இறைவன் ஆணையின் வண்ணம் உமாதேவியார் இடபவாகனத்திருந்து விரைந்து இறங்கிப்போய் ஆறு திருவுருவங்களையும் இருகையாலும் வாரி யணைத்து ஒருருவாக்கினார் . அதுமுதல் முருகனுக்கு ' கந்தன் ' என்ற நாமம் உண்டாயிற்று . உமாதேவியார் தம் திருமுலைப்பாலைப் பொற்கிண்ணத்துக் கறந்து ஊட்டினர் ; இறைவன் திருமுன் கொண்டுசென்றனர் . இறைவன் இடடவாகனத்தில் இடமருங்கு உமையவளும் , இடையில் முருகனுமாக இருந்து சோமாஸ்கந்தமூர்த்தியாகத் திகழ்ந்தார் . தேவர்கள் இக்கோலத் தைக் கண்டு வாழ்த்தினர் . இறைவன் கார்த்திகைமாதர்களுக்கு அருள் வழங்கி , ' நம்மகன் உங்களால் வளர்க்கப்பெற்றமையின் கார்த்திகேயன் என்ற நாமத்தோடு விளங்கட்டும் ; கார்த்திகை நாட்களில் முருகனை வழிபடு வோர்க்கு இருமைப்பயனையும் தந்து முத்தியையும் அளிப்போம் ' என்று திருவாய்மலர்ந்தருளினார் . பராசரமுனிவரால் சாபமெய்திச் சரவணப் பொய்கையிலே மீன்க ளாய்க்கிடந்த குமாரர்கள் ஆறுபேரும் உமாதேவியாரின் பாலையுண்ட புண்ணியத்தால் சாபநீங்கிச் சிவபெருமான் ஆணைவண்ணம் ஞானஸ்கந்தர் உபதேசம் பெறுவதற்காகத் திருப்பரங்குன்று சென்றனர் . ஏனைய தேவர் களும் அவரவர்கள் இருப்பிடம் ஏகினர் . இறைவன் திருக்கயிலைக்கு எழுந்தருளினார் .



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக