துணைவர்கள் வருதல்
தீப்பொறிகளின் வெம்மையாற்றாது எழுந்தோடியபோது உமாதேவி யாரின் பாதச்சிலம்புகள் தெறித்தன . அவற்றின் பரற்கற்களாகிய நவமணி கள் சிதறின . ஒவ்வொரு மணியிலும் உமையம்மையின் நிழல் பட்டது . அம்மணிகளிலிருந்து நவசக்திகள் வெளிவந்தனர் . இறைவனை விரும்பினர் : கருவுற்றனர் . இதனைக்கண்ட இறைவி இச்சூலோடு நெடுங்காலம் வருந்துக எனச் சபித்தார் . நவசக்திகளும் வியர்க்க விருவிருக்க நின்றனர் . இவர்கள் வியர்வையிலிருந்தும் ஓரிலக்கம் வீரர்கள் தோன்றினர் . அவர்கள் நாடோ றும் இறைவனை வணங்கித் தொண்டுடரிந்து வந்தனர் . கருணை நிறைந்த பெருமாட்டியின் ஆணையின் வண்ணம் நவசக்திகளுள் மாணிக்க வல்லி வீரவாகு தேவரையும் , முத்துவல்லி வீரகேசரியையும் , புட்பராகவல்லி வீரமகேந்திரரையும் , கோமேதகவல்லி வீரமகேச்சுரரையும் , வைடூரியவல்லி வீரபுரந்தரரையும் , வைரவல்லி வீரராக்கதரையும் . மரகதவல்லி வீரமார்த் தாண்டரையும் , பவளவல்லி வீராந்தகரையும் , இந்திரநீலவல்லி வீரதீரரையும் பெற்றனர் . பிறந்த நவவீரர்களும் தம்மன்னையரையும் , உமாதேவியரையும் சிவபெருமானையும் வணங்கி நின்றனர் . சிவபெருமான் அவர்களுக்குத் தனித்தனியே வாள் முதலிய படைக்கலங்கள் வழங்கி , ஓரிலக்கம் வீரர் களுடன் கலந்து நீங்களும் நமது முருகனுக்கு ஏவல் புரிக என ஆணை வழங்கினர் . அவர்களும் அங்ஙனமே சிவப்பணி தலைநின்றார்கள் . QA

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக