முருகன் திருவவதாரம்தி திருமணமாகிப்ல நாட்கள் சென்றும் . இறைவன் ஒரு குமாரனைத் தந்தருளாமையால் கவலையுற்ற பிரமன் முதலான தேவர்கள் , நிகழ்ச்சியறிந்து வரும்படி வாயுவைத் தூதாக அனுப்பினர் . வாயு , நந்திதேவர் ஆணையால் சிவபெருமானைக் காணமுடியாமல் திரும்பி வந்தான் . தேவர்கள் தாங் களே திருக்கயிலை சென்று சிவபெருமானைத் தரிசித்துத் தங்குறைகளை விண்ணப்பித்துக் கொண்டனர் . இறைவன் அருள் கூர்ந்து ஈசான முதலான ஐந்து முகங்களோடு அதோமுகமாகிய ஆறாவது திருமுகத்தையுங்கொண்டு எழுந்தருளியிருந்து , ஆறு முகங்களின் நெற்றிக்கண்கள் ஆறிலிருந்தும் தீப்பொறிகளைத் தோற்றுவித்தருளினார் . அப்பொறிகளின் வெம்மையைத் தாங்காது உலகமே உலைந்தது . கடல்கள் வற்றின . பூமி பிளந்தது . ஆனால் பொறிகள் எவ்வுயிர்க்கும் துன்பம் விளைவிக்கவில்லை ; அச்சுறுத்தின . உமா தேவியாரும் திருவுளங்கலங்கித் தம்கோயிலைநோக்கி ஓடினார் . தேவர்கள் சிதறியோடினர் . பெருமான் தம்முடைய திருமுகங்கள் ஐந்தையும் மறைத்து ஒரு திருமுகத்தோடு எழுந்தருளியிருந்து , உலகெங்கும் பரவிய பொறிகளைத் தம்திருமுன்னர் வரும்வண்ணம் பணித்தார் . இறைவன் வாயுதேவனையும் அக்கினிதேவனையும் பார்த்து , ' இப்பொறிகளைச் சரவணத்தில் கொண்டு சேர்க்க ' எனக்கட்டளையிட்டனர் . வாயுதேவன் முதற்கண் அப்பொறிகளைத் தாங்கிச்சென்றான் . ஆற்றாமல் அக்கினியிடம் தந்தான் . அவனும் சிறிது தூரம் சென்று ஆற்றாது கங்கையில் உய்த்தான் . கங்கை வற்றியது . பின் இறைவன்கருணையினால் கங்கைபெருகிச் சரவணப்பொய்கையில் கொண்டு சேர்த்தது . தேவர்கள் சரவணப்பொய்கையைக் காத்து நின்றனர் . அட் போது அருவமாய் உருவுமாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய் பிரமமாய் நின்ற சோதிப்பிழம்பு ஆறு முகங்களும் பன்னிரு கரங்களும் கொண்டு முருகனாக உதித்தார் . அப்போது மங்களவொலிகள் வானத்து எழுந்தன . தேவர்கள் மலர்மாரி பெய்தனர் . அசுரர்களுக்குத் தீ நிமித்தங்கள் தோன்றின . முருகக்கடவுள் ஆறு திருமுகங்களுடன் செந்தாமரைமலர்மீது வீற்றிருந் தருளினார் . தேவர்கள் கார்த்திகைமாதர் அறுவரையும் பார்த்து , முருகனை வளர்க்குமாறு பணித்தனர் . முருகன் ஒரு திருமுகமுடைய ஆறு குழந்தை யாக , அம்மாதர்கள் அறுவருமபாலூட்டி வளர்த்தனர் . முருகக்கடவுள் குழந்தைமைக்கேற்பப் பாலுண்டு , பல திருவிளையாடல்களைப் புரிந்தனர் ; சிறுகுறும்புகள் பல செய்தனர் . இவற்றைக்கண்டு தேவர்களும் , கார்த்திகை மாதர்களும் களித்தனர் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக